நம்பிக்கை

சிலர் என்னை வீழ்த்திவிட
துடியாய் துடிக்கிறார்கள்.

என் துக்கங்களில்
சுகம் தேடுகிறார்கள்.

நான் அதைத்தான்
என் வெற்றியாக நினைக்கிறேன்.

நான் வந்த பாதைகளில் எப்போதும்
பூக்களை பார்த்தது இல்லை.

நான் விழுந்த போதெல்லாம்
தூக்கி விட கரங்கள் இல்லை.

காதல் கனவோடு கலைந்து போனது.

நம்பிக்கயை நம்பி வழி கடந்து வந்தேன்.
துணை ஒன்று கிடைத்தது.
மணம் முடித்து பயணத்தை தொடர்கிறேன்.
வெற்றிகளின் வழி தடங்களை
தூரத்தில் பார்க்கிறோம்.

இன்னும் நம்பிக்கையைத்தான்
நம்பி இருக்கிறோம்

Comments

Popular Posts