வாழ்க்கை சில நேரங்களில்

சில நேரங்களில் எனக்குள்
ஒரு இரவை உணர்கிறேன்.

என் கண்கள் திறந்து இருந்தும்
கருப்பாய் இந்த பூமி தெரிகிறது.

நான் எதை நோக்கி செல்கிறேன்
என்று எனக்குள் கேள்வியை கேட்கிறேன்.

வாழ்க்கை புத்தகத்தில் அழகான பக்கங்களை
மட்டும் பார்த்து வந்த நான் இன்று
சில வரிகளுக்கு அகராதில்
அர்த்தம் தேடுகிறேன்.

-------------
ராஜா

Comments

Popular Posts